The Committee of the Mind

Author
Thanissaro Bhikku
23 words, 108K views, 10 comments

Image of the Weekமனதின் குழு
- தன்னிசாரோ பிக்கு
உங்கள் மனதில் நீங்கள் யார் என்பதைப் பற்றிய பல அடையாளங்கள் உள்ளன. ஒவ்வொரு அடையாளமும் ஒரு தனி 'நீங்கள்' என்று கருதலாம். இந்த அடையாளங்கள் எல்லாம், மனம் என்னும் குழுவின் உறுப்பினர்கள்.

இதனால்தான், நம் மனம் என்பது ஒரு-மனமாக இல்லாமல், பல குரல்களும், விருப்பங்களும் கொண்ட ஒரு கூட்டம் போலத் தோன்றுகிறது.. இந்த மனக்குழுவின் சில உறுப்பினர்கள், தங்கள் ஆசைகளுக்கு ஆதாரங்கள் என்ன என்பதைப் நேர்மையுடன் தெரிவிக்கிரார்கள். குழுவின் மற்ற நபர்கள், அரசியல்வாதிகள் போல நடந்து கொள்கிரார்கள்.

இந்த உள் வேலைகளை வெளிப்படையாக்கி, குழுவை கொஞ்சம் சீரமைப்பது நாம் தியானம் செய்வதன் ஒரு நோக்கம். இதனால் நம் உண்மையான சந்தோஷத்தை விரும்பும் பல எண்ணங்கள், ஒன்றோடு ஒன்று நல்லிணக்கத்துடன் சேர்ந்து செயல் பட இயலும்.

இந்த எண்ணங்ளையும் விருப்பங்களையும் கூட, நாம் ஒரு குழுவாக கற்பனை செய்து கொள்ளலாம். இப்படி செய்வதால், தியானத்தைப் பயிற்சியாக செய்வது நம்முடைய சில விருப்பங்களுக்கு எதிராகத் தோன்றினாலும், எல்லா விருப்பங்களுக்கும் அது எதிரானது அல்ல என்பது நமக்குத் தெளிவாகும். சில இணக்கம் இல்லாத விருப்பங்கள் வெளியேறும் போது, நம்மால் அதைப் பெரிது படுத்தாமல் இருக்க முடியும். இந்தக் குழுவின் நல்லெணங்களைக் கொண்டு மற்ற எண்ணங்களுக்கு நாம் பயிற்சியும் கொடுக்க முடியும். இப்படி செய்வதால் உண்மையான சந்தோஷம் என்ன என்பதை நம் மனதால் உணர முடியும்.

மனக்குழுவின் பல உறுப்பினர்கள் தற்காலிக சந்தோஷத்தைத் தேடித் தேடி அலைவதால், மனதின் பல பரிணாமங்கள், தங்கள் இயல்பு நிலையில் இருந்து, மாறு பட்டு இருக்கின்றன. இதில் ஒரு பரிணாமம், இடங்களாலும், காலங்களாலும், பாதிக்கப் படாதது.. நிபந்தனை அற்றது.. இது மொத்த சுதந்திரம் மற்றும் சந்தோஷத்தை அனுபவம் செய்யும் பரிணாமம். குழுவின் சரியான உறுப்பினர்களுக்கு சரியான பயிற்சி கொடுப்பதன் மூலம் நாம் இந்த பரிணாமத்தை அடைய முடியும்.

இந்தப் பரிணாமத்தைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது உப்பு நீரில் உள்ள நல்ல நீர் போன்றது. நம் சாதாரண மனது உப்பு நீர் போன்றது - குடித்தால் உடல் நிலை சரி இல்லாமல் போகும். இந்த நீரை அப்படியே விட்டு வைத்தால், நல்ல நீர் தன்னாலே பிரிந்து தனியாக வராது. இதைப் பிரித்து எடுக்க, நாம் முயற்சி செய்தால் மட்டுமே முடியும். ஆனால், நம் முயற்சியால் நல்ல நீர் என்பது புதிதாக இங்கே உருவாகவில்லை. ஏற்கனவே நம் உள்ளிருக்கும் நல்ல நீர்தான், பிரிந்து வந்து நம் தாகத்தைத் தீர்க்கிறது.

கேள்வி: உங்கள் மனதின் அடையாளாங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக தோன்றும் பொழுது அதை நீங்கள் எவ்வறு சமன் செய்தீர்கள் என்பதை பகிர்ந்த கொள்ள முடியுமா?.


Add Your Reflection

10 Past Reflections