Experiential Wisdom

Author
S. N. Goenka
19 words, 13K views, 1 comments

Image of the Weekஅனுபவத்தால் வரும் மெய்யறிவு
- S.N. கோயங்கா

மெய்யறிவு என்பதற்கு, சரியாக அறிவது என்று பொருள். மேலோட்டமான உண்மையை அறிவது மெய்யறிவு ஆகாது. ஒரு குழந்தை, ஒரு வைரத்தைப் பார்த்தால், அது அழகான பளபளக்கும் கல் என்று புரிந்து கொள்ளும். அதையே ஒரு நல்ல ஆசாரி பார்த்தால், அதன் குறை நிறைகளை ஆழமாக அறிந்து, அதன் விலையை சரியாக கணிப்பார். இதைப் போல், எந்த ஒரு சூழ்நிலையையும், ஆழத்துடன் நோக்கி, அடியில் படிந்து இருக்கும் முழுமையான உண்மையை, சரியாக புரிந்து கொள்ளும் திறனே மெய்யறிவு.

இந்த அறிவை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று கேள்வி ஞானத்தாலோ, பிறர் கருத்துக்களைப் படிப்பதாலோ வருவது. இரண்டாவது, நம் கருத்துக்களைக் கொண்டு, அலசி ஆராயும் பகுத்தறிவால் வருவது. இவை இரண்டும், வாழ்க்கையில் உபயோகமாக இருந்தாலும், பிறர் வழியே நம்மை அடைந்த காரணத்தால், இவற்றால் நீண்ட காலப் பயன் நமக்கு கிடைப்பது இல்லை.

மூன்றாவது வகையானது, நம் சொந்த அனுபவத்தால் நமக்குள் மலரும் மெய்யறிவு. இந்தப் பயனுள்ள அறிவாற்றலை மேம்படுத்த, நாம் அறநெறிகளைப் பின்பற்றுவதும், விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வதும் அவசியம். இந்த மேம்பட்ட நிலையில் நிற்கும் மனதால் மட்டுமே, உண்மையை, உள்ளது போல், புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும், முடியும்.

கரு:
உங்கள் அனுபவத்தில் மலர்ந்த ஒரு மெய்யறிவை பகிர்ந்து கொள்ளுங்கள்.


Add Your Reflection

1 Past Reflections