வல்லிய விழிப்பு
- ஹெலென் கெல்லர்
புதியதாக பார்வை இழந்த ஒருவன், வலியையும் சோகத்தையும் தவிர ஏதும் மீதி இல்லை என்றே முதலில் நினைகிறான். வாழ்வில் முன்னேறும் தாகம் அணைந்து விடுகிறது. பார்வை இழப்பதற்கு முன் அவனுக்கு சுகமளிட்த அதே பொருட்கள் இப்போது முள்ளாய் குத்துகின்றன.
அப்போது ஒரு விவேகம் நிறைந்த ஆசிரிய நண்பர் அவன் தன் கைகளை கொண்டு நிறைய வேலைகள் செய்ய முடியும் என்றும், காதுகளை கண்களுக்கு இணையாக பயன் படுத்த முடியும் என்றும் கூறுகிறார். அதை அவன் நம்ப மறுக்கிறான். தன்னை இழிவு படுத்துவதாக நினைக்கிறான். தண்ணீரில் தத்தளித்து மூழ்கி கொண்டு இருக்கும் ஒருவன் தன்னை யார் காப்பாற்ற முயற்சி செய்தாலும், அவர்களை அடிக்க முயல்வான். இதுவும் அது போலத்தான். இருந்தாலும், அவனை முயற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும். உலகுடன் தான் இப்போதும் தொடர்பு கொள்ள முடியும் என்று தன் தடைகளை மீறி அவன் புரிந்து கொள்ளும் போது, கனவிலும் நினைக்காத ஒரு ஜீவன் அவனுக்குள்ளே மலர்கிறது. அவனுக்கு விவேகம் இருந்தால், மகிழ்ச்சிக்கும், வெளியெ நிலவும் சூழலுக்கும் அவ்வளவாக தொடர்பு இல்லை என்பதை அவன் புரிந்து கொள்வான். வெளிச்சத்தில் வாழ்ந்த போது இல்லாத ஒரு மன உறுதியுடன் இருட்டில் அவன் வழியை வகுத்துச் செல்வான்.
அதே போல் மனப் பார்வையை இழந்தோரை, அவர்களுக்குள் ஒளிந்து இருக்கும் புதிய ஆற்றல்களைத் தேடவும், புதிய விதங்களில் மகிழ்வடைய கற்றுக்கொள்ளவும், நாம் ஊக்குவிக்க வேண்டும். நமக்கு நம்மைப் பற்றித் தெரிந்தது கடுகளவுதான். நம் வரையறைகளும், சலனங்களும்தான் நம் அறியாமையை போக்கி, முகமூடிகளை நீக்கி, பழைய நம்பிக்கைகளை உடைத்து, பொய்யான தரத்தை அழிக்கின்றன. இந்தக் கடுமையான விழிப்புகளால்தான் புறச் சூழல்களால் கட்டுப்படாத ஒரு விஸ்தாரமான ஒரு இடத்தில் நம்மால் வசிக்க முடியும்; நன்மை, அழகு, உண்மை ஆகியவற்றைப் பாராட்ட முடியும்.
கரு / கேள்வி: ஒரு கடுமையான் விழிப்பையும் அதனால் நீங்கள் புதியதாக உணர்ந்த உள்ளாற்றலையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Add Your Reflection
5 Past Reflections