சரியான வேகத்தில் வாழ்தல்
- கரோல் ஆனர்
வேகம் மற்றும் நிதானம் என்பவை நம் வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிக்கும் குறியீடுகள்.
வேகம் என்பது பொதுவாக பரபரப்பானது, ஆளுமை செய்வது, அவசரப்படுவது, முரட்டுத்தனமானது, அலசி ஆராய்வது, மேலோட்டமானது, சுறுசுறுப்பானது, பொறுமை இல்லாதது, எண்ணிக்கை சார்ந்தது என்று கருதப்படுகிறது.
இதற்கு எதிர்மறையாக, நிதானம் என்பது, அமைதி, ஜாக்கிரதை, கவனிப்பு, சலனமற்ற, உள்ளுணர்வு சார்ந்த, அவசரமில்லா, பொறுமையான, ஆழ்ந்து சிந்திக்கும், தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையாக கருதப் படுகிறது. மக்கள், கலாசாரம், பணி, உணவு - எல்லாவற்றோடும் நிஜமான, ஆழ்ந்த தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு நிதானம் தேவைப் படுகிறது.
நிதானம் என்றால் சுறுசுறுப்பில்லாத ஒரு நிலை என்று அர்த்தம் இல்லை. நிதானமாக ஒரு பணியை செய்யும்போது அதன் பலன் விரைவில் கிடைப்பதை நாம் பல விஷயங்களில் காண்கிறோம், நிதானமான மன நிலையுடன் நம்மால் துரிதமாக காரியங்களை செய்யவும் முடியும்.
நமக்கு வெளியே எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும், உள் நிதானத்துடன் எவ்வாறு நடந்து கொள்வது என்று சில நூறாண்டுகளுக்குப் பிறகு நாம் மீண்டும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இதற்கு நிதான இயக்கம் என்று பெயர் கொடுக்கப் பட்டு உள்ளத
நத்தையின் வேகத்தில் எல்லாற்றையும் செய்ய வேண்டும் என்பது நிதான இயக்க்கத்தின் மையக் கருத்து அல்ல. இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளவர்கள் உங்களயும், என்னையும் போன்ற மக்கள். இந்த வேகமான், நவீன சூழ்நிலையிலும், தரமான வாழ்க்கையை விரும்புவர்கள்.
நிதான இயக்கத்த ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டும் என்றால் சமநிலை என்று சொல்லலாம். எப்போது வேகமாக ஒரு செயல்பாடு தேவைப்படுகிறதோ, அப்போது வேகமாவே செயல்பட வேண்டும். எப்போது நிதானம் தேவைப்படுகிறதோ, அப்போது நிதானத்துடன் செயல் பட வேண்டும். அதாவது, ஒவ்வொரு கணத்திலும், வாழ்வின் லயத்திற்கு ஏற்ற சரியான தாளத்தை தேர்ந்து எடுக்க வேண்டும்.
கரு: நீங்கள் சூழலுக்கு ஏற்ப வேகத்தை மாற்றிய ஒரு தருணத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.