அமைதியின் படைப்பாற்றல்.
- தாதா
வாழ்வின் ஒரு புதிய அழகை நாம் அமைதியில் காணலாம். இந்த அழகைக் கண்டபின் மனதின் சலனங்கள் நிரம்பிய ஆசைகளின் மீது நம் ஈடுபாடு குறையத் துவங்கும். அப்போது நம்மை நம் படைப்பாற்றலில் இருந்து விலக்கி வைக்கும். ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்பு நிறைந்த கனவுகளின் எல்லைக் கோடுகளை நாம் காணலாம். எதிர்பார்ப்பு என்பது, எதிர்காலத்தில் எண்ணத்தை பின்தொடர்வது; இந்த தருணத்தின் அனுபவத்திற்குத் தடையாக நிற்பது.
வெளி உலகில் நாம் வேலை, செயல் இவற்றை செய்தாக வேண்டும். ஆனால் மனதின் எதிர்பார்ப்புகள் நம்மை எந்நேரமும், இந்த வெளி விளையாட்டிலேயே ஆழ்த்தி விடுகின்றன, இவ்வாறு ஆழ்ந்த மனம், இந்த நிலை மாறாமல், தன் உயிர் சக்தியை, புற உலகின் சாதாரணமான, இயந்திரத்தனமான, நாட்டங்களில் செலவழித்து விடுகிறது. இது வாழ்க்கையை பிரிவுகளாக பிரித்து, சமநிலையை பாதித்து, நம்மை நாம் அறியும் முயற்சிக்கு தடையாக இருக்கிறது.
கலையாற்றல் மிக்க நிலை என்பது வாழ்க்கையை தன்னந்தனியாக வாழ்வதால் வருவது அல்ல..அது வாழ்வின் முழுமையில் இருந்து வருவது. உடல் மனம் ஆன்மா மற்றும் உணர்வுகள் இதில் ஐக்கியமாகி உள்ளன. இந்த நிலையில் புரிதலுக்கும், செயலுக்கும் நடுவே இடைவெளி இல்லை. அறிவாற்றலுக்கும், படைப்பற்றலுக்கும் நடுவே இடைவெளி இல்லை. நிகழ் தருணத்தில் வாழ்வின் அசைவு தன்னிச்சையாக வெளிப்படுகறது. இப்படிப் பட்டவருக்கு ஓவியம் தீட்டுவதில் உள்ள திருப்தி, சமயல் செய்வதிலும் கிடைக்கிறது. இந்த நிலையில் செயல் படுவோர் கலைஞர்கள் எனப்படுகிறார்கள். ஒருவர் எந்தத் துறையில் பணி செய்தாலும், அதன் வெளிப்பாடு எந்த விதத்தில் இருந்தாலும், அந்த உயிர் சக்தியின் தரம் அவரை ஒரு கலைஞராக்குகிறது.
கலை என்பது வெறும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றைப் பயிற்சி செய்வதன் மூலம் வரும் திறனோ, திறமையோ அல்ல. நம்முள் இருக்கும் ஆத்ம அறிவின் வெளிப்பாடே கலை. இதை காண்பதற்கு முழுமையான கவனமும், அமைதியும் தேவை. ஏனெனில், நம் ஆத்ம சக்தியின் அமைதியில்தான் படைப்பாற்றல் பிறக்கிறது.
கேள்வி: உங்கள் படைப்பாற்றல் எந்த சூழ்நிலையில் தடையில்லாமல் மலர்கிறது?
Add Your Reflection
1 Past Reflections