நான் அதுவே
- நிஸர்கதத்தா மஹராஜ்
என் கவனத்தின் குவியத்தை மாற்றும் பொழுது, எப்படியோ, எதைப் பார்க்கின்றேனோ அதுவாக ஆகி, அதனுடைய உணர்வு நிலைகளை நான் அனுபவிக்கிறேன். மற்றும், அந்தப் பொருளின் உள் சாட்சியாக ஆகி விடுகிறேன். பிரக்ஞையின் பிற குவியங்களுக்குள் செல்ல முடியும் இந்த சக்தியை அன்பு என்று நான் அழைக்கிறேன். நீங்கள் அதற்கு எந்தப் பெயர்
வேண்டுமானலும் சூட்டிக் கொள்ளலாம். சர்வமும் நான் என்று அன்பு சொல்கிறது. நான் சூன்யம் என்று ஞானம் சொல்கிறது. இவை இர்ண்டுக்கும் நடுவேதான் என் வாழ்வின் ஓட்டம். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், நான் ஒரு அனுபவத்தின் கர்த்தாவாகவும், பொருளாகவும் இருக்க முடிவதால் இரண்டுமே நான்தான் என்றும், எதுவுமே நானில்லை என்றும், நான் இரண்டுக்கும் அப்பாற்பட்டவன் என்றும் சொல்கிறேன்.
******
உலகம் என்பது தட்டெழுத்த்து பதிந்த ஒரு காகிதம் போல. அதன் வாசிப்பும், அர்த்தமும் படிப்பவரைப் பொறுத்து மாறுபடும். ஆனால் காகிதம் என்பது பொதுவானது; எப்பொழுதும் இருப்பது; மிக அரிதாக உணர்ந்து கொள்ளப்படுவது. நாடாவை எடுத்து விட்டால், தட்டெழுத்து அடித்தாலும், காகிதத்தில் அச்சு ப்டியாது. என் மனமும் அது போன்றது - பதிவுகள் வந்து
கொண்டே இருந்தாலும் சுவடுகள் படிவதில்லை.
******
அமைதியான மனம் ஒன்று மட்டுமே நமக்குத் தேவை. அது அமைந்து விட்டால் மற்ற எல்லாம் சரியாக நடக்கும். சூரிய உதயம் உலகத்தை செயல்பட வைப்பது போல விழிப்புணர்வு மனதில் மாற்றங்களை உருவாக்கும். அமைதியான், நிலையான சுய விழிப்புணர்வு இருக்கும் பொழுது, முயற்சி இல்லாமலேயே, உள் ஆற்றல் விழித்து எழுந்து பல அற்புதங்களை நிகழ்த்தும்.
கரு / கேள்வி:
நீங்கள் கர்த்தாவாக இல்லாமல், பொருளாக மாறிய அனுபவம் இருந்தால், அதைப் பகிர்ந்து கொள்ளவும்.
Add Your Reflection
2 Past Reflections