Not Minding What Happens

Author
Eckhart Tolle
23 words, 49K views, 24 comments

Image of the Weekநடப்பதை எதிர்க்காதது
- எக்ஹார்ட் டொல்லே

இந்தியாவின் புகழ் பெற்ற தத்துவ ஞானி J.கிருஷ்ணமூர்த்தி சுமார் 50 வருடங்களுக்கு உலகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத விஷயங்களைப் பற்றி விவரிக்க முயற்சி செய்தார்,. தன் வாழ்க்கையின் பிற்பகுதியில். ஒரு சொற்பொழிவின்போது, அங்கிருந்த மக்கள் ஆச்சரியப் படும் விதத்தில் தன் வாழ்வின் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னார். அனைவரும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர். கூட்டத்தில் இருந்த பலர் 20, 30 வருடங்களாக அவர் சொற்பொழிவுகளை கேட்டு வந்து இருந்தாலும் சாரத்தை புரிந்து கொள்ள இயலவில்லை என்று கருதியவர்கள். கடைசியாக தங்கள் ஆசான் புதிருக்கான விடையை கொடுக்கப் போகிறார் என்று நிமிர்ந்து அமர்ந்தனர்.

"என்ன நடக்கிறதோ அதை நான் எதிர்ப்பதில்லை" என்று அவர் ரகசியத்தை சொல்லி முடித்தார். அவர் அதை விளக்கவில்லை. ஆனால் இந்த சிறிய வாக்கியத்தின் உள்ளர்த்தம் மிக ஆழமானது.

நடப்பதை எதிர்க்காத போது நான் அதனுடன் ஒருமைப்பாட்டில் இருக்கிறேன். இங்கு "நடப்பது" எபன்பது அந்த தருணத்தின் தன்மையை, உருவத்தை, பண்பைக் குறிக்கும். 'எதிர்க்காதது' என்பது அதை நல்லது என்றோ, தீயது என்றோ வகைப்படுத்தாமல், அதை அவ்வாறே ஒத்துக் கொள்ளுதல் ஆகும்.

அப்படி என்றால் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வர நாம் முயற்சிகள் எடுக்க வேண்டாம் என்று அர்த்தம் கிடையாது. கண்டிப்பாக முயற்சி எடுக்க வேண்டும். அந்த முயற்சியின் அடிப்படை, நிகழ் தருணத்துடன் ஒருமைப்பாடு என்பதாக இருக்கும்போது, அந்த செயல், உயிரின் அறிவாற்றலிடமிருந்தே நேரடியாக, சக்தியைப் பெறுகிறது.

கரு: நடப்பதை எதிர்க்காமல் இருப்பது என்பதற்கு உங்கள் வாழ்வில் அர்த்தம் என்ன?
 

Ekchart Tolle in his book, "A New Earth." 


Add Your Reflection

24 Past Reflections