ஜன்னலை சுத்தம் செய்தல்
- ஆஜான் சுமேதோ
சலிப்படைதல் என்பதை தன்-நினைவுள்ள ஒரு நிலையாக நாம் பொதுவாக ஒத்துக்கொண்டதில்லை. அது நம்முள் நுழைந்த உடனேயே. சுவையான, சுகமான ஒன்றை மனம் தேட ஆரம்பிக்கிறது.
ஆனால் தியானத்தில், சலிப்பை அதுவாக இருக்க விடுகிறோம். சுய நினைவுடன், சலிப்புடன், மன அழுத்தத்துடன், பொறாமையுடன், கோபத்துடன்,வெறுப்புடன் இருப்பதற்கு நம்மை நாம் முழுமையாக அனுமதிக்கிறோம். இது வரையில் பிரக்ஞையில் இருந்து ஒதுக்கியும் அமுக்கியும் வைத்திருக்கும் மோசமான, வெறுப்பு நிறைந்த வாழ்க்கை அனுபவங்களை, நம் குணங்களின் குறைகளாக கருதாமல், காருண்யத்துடன் ஏற்றுக்கொள்கிறோம். சில பழக்க வழக்கங்கள், தன் இயற்கையான போக்கிலேயே முடிவுக்கு வர, அடக்குமுறை இல்லாமல், மெய்யறிவுடனும் கருணையுடனும் அனுமதிக்கிறோம்.
நாம் சோர்வுடனும், அழுத்தத்துடனும் இருக்கும்பொழுது அழகை நம்மால் ரசிக்க முடிவது இல்லை. ஏனெனில், அந்த நேரத்தில், எதையுமே அதன் இயற்கையில் நம்மால் பார்க்க முடிவதில்லை. ஒரு அழுக்கடைந்த ஜன்னலின் வழியே எதைப் பார்த்தாலும், அது தூசி படிந்து, சாம்பல் நிறத்தில்தான் தெரிவது போல்தான் இது. இந்த ஜன்னலை சுத்தம் செய்வதற்கும், மனதைத் தூய்மைப் படுத்துவதற்கும், தன் நிலைக்குள் உணர்வுகளும், எண்ணங்களும் வந்து செல்ல அனுமதி கொடுப்பதற்கும், தியானம் என்பது ஒரு வழி. இதில், மெய்யறிவு எனும் கருவியைக் கொண்டு உள்ளதை உள்ளவாறு சாட்சி நிலையில் காண்கிறோம். அழகின் மேலும், புனிதத்தின் மேலும், பற்று கொள்ளாமல், உண்மையாக அவற்றைப் புரிந்து கொள்கிறோம்.
இயற்கையின் வழி எவ்வழி என்று சிந்தித்து அறிந்து கொண்டால், அறியாமையால் ஏற்படும் பழக்க வழக்கங்களால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்க முடியும்.
கேள்வி: நீண்ட நாட்களாக உங்களிடம் இருந்த ஒரு பழக்கத்தை விட நினைத்து இருக்கீர்களா? அதற்கு உங்கள் அணுகுமுறை என்ன?
Add Your Reflection
1 Past Reflections