பரிவு என்பதை வன்முறை இல்லாத, தீங்கு விளைவிக்காத, ஆக்கிரமிப்பு இல்லாத ஒரு மன நிலை என்று உத்தேசமாக விவரிக்கலாம். மற்றவர்கள் துயரத்திலிருந்து விடுபட வேண்டும் என்று பொறுப்புடன், மரியாதையுடன், அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒரு மனப்பாங்கு இது.
பரிவைப் பற்றி மக்கள் பேசும்பொழுது, அதை பிணைப்புடன் குழப்பிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. அதனால் நாம் இதைப் பற்றி விவாதிக்கும்போது இரண்டு வகையான அன்பு அல்லது பரிவுக்கு இடையே உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வகையான பரிவு பிணைப்புக்களின் சாயம் பூசியது; ஒருவர் மேல் நாம் செலுத்தும் அன்பு நமக்கு திரும்பி வரும் என்ற எதிர்பார்ப்பு நிரம்பியது; பேதங்களும், விருப்பு வெறுப்புகளும் கொண்டது; உறுதி இல்லாதது. நட்பு என்ற ஒன்றை மையமாக வைத்து வரும் உறவு ஒரு நெருக்கத்தைக் கொடுக்கலாம். ஆனால் கருத்து வேறுபாடு, கோபம் போன்றவை சூழ்நிலையில் ஒரு சின்ன மாற்றத்தை ஏற்படுத்தும் பொழுது நம் எண்ணங்களின் பிம்பம் மாறுகிறது. நண்பன் என்ற படிவம் மறைந்து போகிறது. உணர்வுகளின் நெருக்கம் கரைந்து போகிறது. அன்புக்கும் பரிவுக்கும் பதிலாக வெறுப்புணர்வு தலைத் தூக்கக் கூடும். பிணைப்பை அஸ்திவாரமாக கொண்ட அன்பானது, வெறுப்புடனும் தொடர்பு கொண்டது என்று கூறலாம்,
கரு / கேள்வி
பிணைப்பு இல்லாத அன்பின் வெளிப்பாடு ஒன்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.